தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி அதிகாரிகள் குறைவு: பள்ளி முதல்வர்களின் வேதனை

கல்வி அதிகாரிகள் குறைவு: பள்ளி முதல்வர்களின் வேதனை

கல்வி அதிகாரிகள் குறைவு: பள்ளி முதல்வர்களின் வேதனை


UPDATED : நவ 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை:
மெட்ரிக்  பள்ளிகளை நிர்வகிக்க பல மாவட்டங்களில் அதிகாரிகள் இல்லை. அங்கீகாரத்தை புதுப்பிக்கக் கோரும் பைல்களும் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்புவதால் பள்ளி முதல்வர்கள் வேதனை அடைகின்றனர்.
தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளை நிர்வகிக்க இரு மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம் 15 ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருவண்ணாமலை உட்பட ஏழு மையங்களில் பல மாதங்களாக அதிகாரிகள் இல்லை. இங்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர்.
ஒரே நேரத்தில் இருவேறு பணிகளை கவனிப்பதால் மெட்ரிக் பள்ளிகளை ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, டி.இ.ஓ., அந்தஸ்துள்ள இப்பணியிடத்தில் அதிகாரிகளை உடனே நியமிக்க வேண்டும். இந்த அதிகாரிகளுக்கு பள்ளிகளை ஆய்வு செய்ய ஒரு ஆண்டுக்கு முன் ஜீப்புகள் வழங்கப்பட்டன. டிரைவர் பணியிடங்கள் வழங்கவில்லை. இதனால் பல மாவட்டங்களில் ஜீப்புகள் சும்மா நிற்கின்றன.
தாமதமாகும் அங்கீகாரம்: மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக விதிமுறைகள் பள்ளிகளின் ‘கழுத்தை நெரிப்பதாக’ அமைந்துள்ளன. எனவே, அங்கீகாரம் புதுப்பிக்க அனுப்பும் பைல்கள் இயக்குனரகத்தில் தேங்குகின்றன. சமீபத்தில் அவற்றில் பல விளக்கம் கேட்டு பள்ளிகளுக்கே மீண்டும் திருப்பி அனுப்பப் பட்டுள்ளன. இதனால் பள்ளி நிர்வாகிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
‘முறையான விதிமுறைகள் குறித்து கேட்டால் பரவாயில்லை, பள்ளியில் இருவழிப் பாதை இல்லை, நுழைவு வாயில் தேசிய நெடுஞ்சாலையை நோக்கி உள்ளது, இடிதாங்கி அமைக்கவில்லை, மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் உள்ளதா, கட்டடத்திற்கு இன்சூரன்ஸ் உள்ளதா? என கேட்டு பைல்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
இவற்றையெல்லாம் இத்தனை நாட்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்கலாம். அரசு, மாநகராட்சி மற்றும் மாநில பாடத்திட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மேற்கண்ட வசதிகள் உள்ளனவா?’ என்று பள்ளி முதல்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுபோன்ற செயல்பாடுகளால் மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 186 மெட்ரிக்  பள்ளிகளில் வெறும் 46 பள்ளிகளே புதுப்பித்தல் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
மெட்ரிக்  பள்ளிகளின் இயக்குனர் மணியிடம் கேட்டபோது, ‘காலிப் பணியிடங்களில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரும் பைல்கள் எதுவும் முன்புபோல தேங்குவதில்லை. பைல்களை உடனுக்குடன் அனுப்பி விடுகிறோம்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us