தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எறும்பு மருந்து தின்ற மாணவர்களிடம் சி.இ.ஓ., விசாரணை

எறும்பு மருந்து தின்ற மாணவர்களிடம் சி.இ.ஓ., விசாரணை

எறும்பு மருந்து தின்ற மாணவர்களிடம் சி.இ.ஓ., விசாரணை


UPDATED : ஆக 10, 2013 12:00 AM

ADDED : ஆக 10, 2013 08:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2013 12:00 AM ADDED : ஆக 10, 2013 08:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலூர்: எறும்பு மருந்து தின்று, தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களை சந்தித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் ஹைஸ்கூல் சாலையில், கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் பல இடங்களில், ஆசிரியர் மற்றும் ஆசிரியை பற்றி தவறாக சித்தரித்து எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, பிளஸ் 2 கலைப்பிரிவை சேர்ந்த, ஆறு பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

பள்ளி நிர்வாகத்தினர், நேற்று முன்தினம் விசாரணை நடத்தி,, ஆறு மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடிவு செய்தனர். மனமுடைந்த ஆறு மாணவர்களும், எறும்பு மருந்து பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து, மயங்கி விழுந்தனர்.

ப.வேலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார், நேற்று விசாரணை நடத்தினார். அதை தொடர்ந்து, தலைமையாசிரியர், ஆசிரியர்களிடமும் விசாரணை செய்தார்.

இதுகுறித்து சி.இ.ஓ., குமார் கூறுகையில், "சம்பவம் தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில், இரு தரப்பினரையும் நேருக்கு நேர் விசாரணை நடத்தி, அதன் முடிவில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதுகுறித்து போலீசில் தகவல் தெரிவித்தும், இதுவரை மாணவர்களிடம் போலீசார் எவ்வித விசாரணையும் செய்யாமல் மவுனமாக இருப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us