புதுச்சேரி நாணயவியல் கண்காட்சி: மாணவ, மாணவிகள் ஆர்வம்
புதுச்சேரி நாணயவியல் கண்காட்சி: மாணவ, மாணவிகள் ஆர்வம்
UPDATED : ஆக 11, 2013 12:00 AM
ADDED : ஆக 11, 2013 09:44 AM
அ நிறம் | அளவு
உப்பளம் இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தொண்டை மண்டல நாணயவியல் கழகம் சார்பில், மூன்று நாள் நாணயக் கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது.
கண்காட்சியில், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலம் மற்றும் பிற்கால சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கால நாணயங்களின் தொகுப்புகள், விஜயநகர பேரரசு, செஞ்சி, தஞ்சாவூர், மதுரை நாயக்க மன்னர் காலத்து காசுகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார், ஹைதராபாத் நிஜாம் காலத்திய நாணயங்கள் மற்றும் அரிய வகை கலைப்பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்று, காலை 10:00 மணி முதல், இரவு 7:00 வரை, அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். கண்காட்சி இன்றுடன் (11ம் தேதி) நிறைவு பெறுகிறது.
