சாதனைக்குப் பாராட்டு: இந்திய நூலகருக்கு சிங்கப்பூரில் விருது
சாதனைக்குப் பாராட்டு: இந்திய நூலகருக்கு சிங்கப்பூரில் விருது
UPDATED : ஆக 20, 2013 12:00 AM
ADDED : ஆக 20, 2013 11:27 AM
அ நிறம் | அளவு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில், இந்திய வம்சாவளி நூலகருக்கு, "வாழ்நாள் பங்களிப்பு" விருது வழங்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் ராசு ராமச்சந்திரன், 40 ஆண்டுகளாக, அந்நாட்டின், நூலகத் துறை முன்னேற்றத்துக்காக சேவையாற்றி உள்ளார். தேசிய நூலக வாரியத்தின் துணைத் தலைவராக இருந்த ராமச்சந்திரன், 70, நூலகத் துறை விரிவாக்கத்திற்கும், அதன் சுதந்திரத்துக்கும் தொண்டாற்றி உள்ளார்.
சிங்கப்பூரில், தற்போது, சர்வதேச நூலகத் தகவல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட, சிங்கப்பூர் அதிபர் டோனி டான், ராமச்சந்திரனுக்கு, "வாழ்நாள் பங்களிப்பு" விருது வழங்கி கவுரவித்தார்.
