தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டப்படிப்பு படிக்க நுழைவு தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.

பட்டப்படிப்பு படிக்க நுழைவு தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.

பட்டப்படிப்பு படிக்க நுழைவு தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.


UPDATED : செப் 09, 2013 12:00 AM

ADDED : செப் 09, 2013 08:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2013 12:00 AM ADDED : செப் 09, 2013 08:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: பட்டப்படிப்பு படிப்பதற்காக, தர்மபுரி, எம்.எல்.ஏ., நுழைவுத் தேர்வு எழுதினார்.

தர்மபுரி அரசு கலைக் கல்லூரி யில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், இளங்கலை பட்ட படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, நேற்று நடந்தது. இதில், தர்மபுரி எம்.எல்.ஏ., பாஸ்கர், 47, உட்பட, 65 பேர் தேர்வு எழுதினர். காலை, 10 :00மணி முதல், 1:00 மணி வரை தேர்வு நடந்தது.இது குறித்து, எம்.எல்.ஏ., பாஸ்கர் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக, பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில், பி.ஏ., தமிழ் இலக்கியம் படிக்க விண்ணப்பித்திருந்தேன். இதற்கான, நுழைவுத் தேர்வு இன்று (நேற்று) எழுதினேன். அனைத்து வினாக்களும் எளிதாக இருந்ததால், நுழைவு தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us