தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுவைப் பல்கலை தொலைதூரக் கல்வியில் மேலாண்மை படிப்பு

புதுவைப் பல்கலை தொலைதூரக் கல்வியில் மேலாண்மை படிப்பு

புதுவைப் பல்கலை தொலைதூரக் கல்வியில் மேலாண்மை படிப்பு


UPDATED : செப் 10, 2013 12:00 AM

ADDED : செப் 10, 2013 08:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2013 12:00 AM ADDED : செப் 10, 2013 08:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுவை: புதுவைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் எம்.பி.ஏ மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எம்.பி.ஏ.,வில் (ஜென்ரல், மார்க்கெட்டிங், யுமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட், ரீடைல் மேனஜ்மென்ட், பினான்ஸ், இன்டர்நேஷனல் பிசினஸ், டூரிசம், ஆப்ரேஷன் அன்ட் சப்ளை செயின் மேனஜ்மென்ட், இன்சூரன்ஸ் மேனஜ்மென்ட், ஹோஸ்பிடல் மேனஜ்மென்ட்) உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹோஸ்பிட்டல் மேனஜ்மென்ட் படிப்புக்கு இளங்கலையில் எம்பிபிஎஸ், பார்மசி, டென்டல், நர்சிங், பிசியோதெரபி, பயோ-இன்ஜினியரிங், பயோ-சயின்ஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

முதுகலை பட்டயப் படிப்பில் உள்ளிட்ட படிப்புகளில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.pondiuniv.edu.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us