தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பணி: ஐகோர்ட் தடை

காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பணி: ஐகோர்ட் தடை

காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பணி: ஐகோர்ட் தடை


UPDATED : செப் 13, 2013 12:00 AM

ADDED : செப் 13, 2013 09:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2013 12:00 AM ADDED : செப் 13, 2013 09:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு) பணியை மேற்கொள்ள டீன் ஜோசப் துரைராஜை நியமித்த பல்கலை பதிவாளர் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.

சின்னாளபட்டி செந்திவேல் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலையில் வேளாண் மற்றும் கால்நடைத்துறை டீனாக பணிபுரிகிறேன். ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்துறை டீனாக ஜோசப் துரைராஜ் உள்ளார். பல்கலை துணைவேந்தர் பதவி செப்.,9 முதல் காலியாக உள்ளது. பல்கலை விதிகள்படி துணைவேந்தர் பதவி காலியாக இருக்கும் பட்சத்தில், டீன்களில் யாருக்கு பணிமூப்பு உள்ளதோ, அவர்களில் ஒருவர் துணைவேந்தருக்குரிய பணியை (பொறுப்பு) மேற்கொள்ள வேண்டும்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் உயர்கல்வித்துறை இணைச் செயலாளர் உத்தரவின்படி, என்னைவிட பணியில் இளையவரான ஜோசப் துரைராஜை துணைவேந்தருக்குரிய பணியை மேற்கொள்ளுமாறு, பல்கலை பதிவாளர் செப்.,10 ல் உத்தரவிட்டார். இது பல்கலை விதிகளுக்கு முரணானது. பணிமூப்பை கருத்தில் கொள்ளவில்லை. பதிவாளர் உத்தரவை ரத்து செய்து, துணை வேந்தருக்கு உரிய பணியை மேற்கொள்ள என்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் வீரகதிரவன் ஆஜரானார். பல்கலை பதிவாளர் உத்தரவிற்கு நீதிபதி தடை விதித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us