தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவிகள் பாதுகாப்பிற்கு "சேவ் மை சிஸ்டர்ஸ்" மோதிரம்

மாணவிகள் பாதுகாப்பிற்கு "சேவ் மை சிஸ்டர்ஸ்" மோதிரம்

மாணவிகள் பாதுகாப்பிற்கு "சேவ் மை சிஸ்டர்ஸ்" மோதிரம்


UPDATED : செப் 16, 2013 12:00 AM

ADDED : செப் 16, 2013 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2013 12:00 AM ADDED : செப் 16, 2013 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த புதிய மோதிரத்தை, "சேவ் மை சிஸ்டர்ஸ்" (என் சகோதரிகளை காப்பாற்றுங்கள்) டிரஸ்ட் தலைவர் இம்ரான் கான், சமாஜ்வாடி கர்நாடகா மாநில தலைவர் சங்கர் பிதரி ஆகியோர் பெங்களூரில் வெளியிட்டனர்.

புதுமை மோதிரத்தில், மிகச்சிறிய அளவிலான டேங்க், சிறிய ஊசி, பம்ப், கிளிப் அமைக்கப்பட்டிருக்கும். சிறிய டேங்கில், மிளகாயில் தயாரிக்கப்பட்ட, "கேப்சில்" என்ற ரசாயனம் இருக்கும். இதை, மோதிரத்தின் சிறிய ஊசி பம்பின் மூலம் ஆபத்து நேரங்களில் உடலில் செலுத்தலாம். இம்மோதிரத்துக்கு, 1,999 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஐந்து பேரை தாக்கலாம்

இம்மோதிரத்தை பயன்படுத்தும் பெண்கள், இவ்விரண்டு கிளிப்புகளை அகற்றி, டேங்கில் உள்ள மிளகாய் ரசாயனத்தை, எதிராளிகள் உடலில் செலுத்தினால், அதிகமான வலி, எரிச்சல், நமச்சல் ஏற்படும். இதனால், உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. சாதாரண மோதிரம் போல் தயாரித்து உள்ளதால், ஒவ்வொருவரும் அணிந்து கொள்ளலாம். ஒரு மோதிரத்தின் மூலம், ஐந்து பேரை எதிர்கொள்ளலாம்.

"சேவ் மை சிஸ்டர்ஸ்" உதவியை பெற விரும்பும் பெண்கள், 080 - 6450 0112 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என்று அமைப்பு தலைவர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us