தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘காலநிலை மாற்றத்திற்கேற்ப வேளாண் உற்பத்தி முறை அவசியம்’

‘காலநிலை மாற்றத்திற்கேற்ப வேளாண் உற்பத்தி முறை அவசியம்’

‘காலநிலை மாற்றத்திற்கேற்ப வேளாண் உற்பத்தி முறை அவசியம்’


UPDATED : டிச 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
“காலநிலை மாற்றத்தைக் கருதி, வேளாண் உற்பத்தி முறையை வலுப்படுத்த வேண்டும்,” என விஞ்ஞானி சுவாமிநாதன் பேசினார்.
கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் 20வது பட்டமளிப்பு விழா டிச. 3ம் தேதி நடந்தது. விழாவில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியதாவது:
இரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம். நாட்டில் ஏராளமான குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. இக்குழந்தைகள் வருங்காலத்தில் மற்றொரு குழந்தைக்கு தாயாக இருக்கும் வரையிலும் ஊட்டச்சத்து குறைவு இருக்கவே செய்கிறது. இப்பாதிப்பு, அடுத்த சந்ததிக்கும் செல்கிறது.
இந்த பற்றாக்குறையை சரிசெய்ய, ‘பசியால் வாடாதோர்  மாநிலம்’ என்ற நிலையை மாநில அரசு அடைய வேண்டும். இதற்கு சமச்சீர் உணவு முறையை சுழற்சி முறையில் கொண்டு வர வேண்டும். காலநிலை மாற்றத்தால்  உணவு பாதுகாப்பு மிகப்பெரிய பாதிப்பு இருக்கும். வெப்பநிலை, கடல்நீர் மட்டம் உயர்வு, உணவு உற்பத்தியை வெகுவாக பாதிக்கும்.
இந்தியாவில் மக்கள்தொகை பெருகி வருகிறது. ஆனால், விவசாய நிலம், நீர்வளம் சுருங்கி வருகிறது. இவை வருங்காலத்தில் மிகப்பெரிய பேரழிவுக்கு வழி வகுக்கும். தற்போதுள்ள காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, வேளாண் உற்பத்தி முறையை வலுப்படுத்த வேண்டியது மிக அவசியம்.
இந்தியாவில் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 16 சதவீத்தில் இருந்து 11 சதவீதமாக குறைந்துள்ளது. இச்சூழலில் சிறுவிவசாய நில மேலாண்மை மிகவும் முக்கியம். தற்போது நாட்டில் 40 சதவீதம் பேர் விவசாயம் செய்யவே விரும்புகின்றனர். ஆனால், அவர்களின் சந்ததியினர், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு செல்கின்றனர். இவ்வாறு விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசினார்.
அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் சண்முகானந்தம் பேசுகையில், “இளைஞர்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும் வகையிலும், நன்னடத்தைகளை கற்றுத்தரும் வகையிலும் கல்வி முறை இருக்க வேண்டும்,” என்றார். விழாவில் துணைவேந்தர் சரோஜா பிரபாகரன், துறைத்தலைவர்கள் பலர்  பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us