சீன விண்வெளி மையத்தை பார்வையிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி
சீன விண்வெளி மையத்தை பார்வையிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி
UPDATED : செப் 21, 2013 12:00 AM
ADDED : செப் 21, 2013 10:48 AM
அ நிறம் | அளவு
பீஜிங்: சீனா அமைத்து வரும் விண்வெளி மையத்தை வெளிநாட்டவர்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன அறிவில் அறிஞர் ஜூஹோ ஜியான்பிங் கூறியதாவது: சீனா விண் வெளியில் அமைத்து வரும் அறிவியல் மையம் வரும் 2020-ம் ஆண்டில் நிறைவு பெறும். அவை நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு அறிஞர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். இதன்மூலம் பிற நாட்டு அறிஞர்கள் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்படும் என கூறினார்.
மேலும் தற்போது அமைக்கப்பட்டு வரும் விண்வெளி மையத்தி்ல் மூன்று அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் வரையில் தங்கியிருந்து பணிபுரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக தலைநகர் பீஜிங்கில் 20 நாடுகள் கலந்து கொண்ட கருத்தரங்கம் ஐந்து நாட்கள் நடைபெற்றது.
