தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச உபகரணங்களை திரும்ப அளித்து மாணவர்கள் போராட்டம்

இலவச உபகரணங்களை திரும்ப அளித்து மாணவர்கள் போராட்டம்

இலவச உபகரணங்களை திரும்ப அளித்து மாணவர்கள் போராட்டம்


UPDATED : செப் 25, 2013 12:00 AM

ADDED : செப் 25, 2013 08:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2013 12:00 AM ADDED : செப் 25, 2013 08:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாற்றுத்திறனாளி நலத்துறையால் வழங்கப்பட்ட இலவச உபகரணங்களை, கமிஷனர் அலுவலகத்தில், திரும்ப வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட, பார்வையற்ற மாணவர்கள், நேற்று கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் போராடும் மாணவர்களுக்கு, மதுரை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில், மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பார்வையற்ற மாணவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பை வழங்க கோரி, ஒன்பது நாளாக, பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் கல்லூரி மாணவர் சங்கத்தினர், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் முத்தாய்ப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட, இலவச உபகரணங்களை, திரும்பி கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதில், 200க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். அரசின் சார்பில், வழங்கப்பட்ட உபகரணங்களோடு, பார்வையற்ற மாணவர்கள், கமிஷனர் அலுவலகத்துக்குள் நுழையும் போதே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மாணவர்களை கைது செய்தனர். பின், மாலையில் விடுதலை செய்தனர்.

இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மடக்கு குச்சிகள், பூதக்கண்ணாடி உள்ளிட்ட தற்போதைய தீர்வுக்கான, நிவாரணம் மட்டுமே வழங்கப்படுகிறது; ஆனால், நாங்கள் கேட்பது, நிரந்தர தீர்வு. பார்வையற்ற மாணவர்களுக்கு, ஆசிரியர் பணியே, சரியான பணியாகும்.

ஒன்பது நாட்களாக, இடைவிடாமல் போராட்டம் நடத்தியும், அரசு எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கிறது. இந்நிலையில், போலீசாரும் எங்களை துன்புறுத்த துவங்கியுள்ளனர். நேற்று காலை, மாணவர்களை கைது செய்த போது, பல மாணவர்களை போலீசார் அடித்து உதைத்தனர்.

எங்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தவறானது. அகிம்சை முறையில், போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் எங்கள் மீது, அரசு வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. இது தவறான போக்கு. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us