தேர்வுக்கு காலம் கடந்து விண்ணப்பித்தால் ரூ.ஆயிரம் அபராதம்
தேர்வுக்கு காலம் கடந்து விண்ணப்பித்தால் ரூ.ஆயிரம் அபராதம்
UPDATED : டிச 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புனே பல்கலைக்கழகத்தில் 116 டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும், 178 இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இப்பல்கலைக்கழகத்தின்கீழ் புனே, அகமதாபாத், நாசிக் ஆகிய மாவட்டங்களில் 525 உறுப்பு கல்லூரிகளும், 250 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன.
இவற்றில் மொத்தம் 6 லட்சம் உள்நாட்டு மாணவர்களும், 14 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்களும் படிக்கின்றனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக தேர்வுத்துறை கட்டுப்பாடு அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காலம் கடந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ரூ.1,000 சிறப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும். மார்ச், 2009 முதல் இந்த விதி அமல்படுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க, அனைத்து கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
