புயல் எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
புயல் எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
UPDATED : நவ 16, 2013 12:00 AM
ADDED : நவ 16, 2013 10:24 AM
அ நிறம் | அளவு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை நாகை அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளூர், நாகை, விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
