தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்க கல்வி பள்ளிகளில் ஆசிரியர் பணி நிரவல்?

தொடக்க கல்வி பள்ளிகளில் ஆசிரியர் பணி நிரவல்?

தொடக்க கல்வி பள்ளிகளில் ஆசிரியர் பணி நிரவல்?


UPDATED : டிச 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தனியார் தொடக்க பள்ளிகள் அரசு நிதி உதவி பெற்று இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகள், அரசின் விதிமுறைப்படி இயங்கவில்லை என்று குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது. கும்பகோணம் தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு, பள்ளிகள் குறித்த விஷயத்தில் அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதத்திற்காக பல்வேறு நடைமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கீகாரம் பெற்றுள்ள ஒரு தனியார் பள்ளி, ஒவ்வொரு ஆண்டும் தனது அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, கட்டட உறுதி குறித்த சான்றிதழ், கட்டட அனுமதி உள்ளிட்டவைகள் ஒவ்வொரு ஆண்டும் பெறப்பட்டு, அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அரசு உதவி பெறும் பெரும்பாலான பள்ளிகள் இந்த விஷயத்தை பின்பற்றுவதில்லை. தேவையான சான்றிதழ்களை பெற்று, புதுப்பிக்க பல்வேறு நடைமுறை சிக்கல்களை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் சந்திக்க வேண்டியிருப்பதால், புதுப்பித்தலை செய்யாமல் புறக்கணிக்கின்றனர். இவ்வாறான பள்ளிகளை கண்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மேலும், அரசு உதவி பெறும் பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி நிரவல் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாகவும், சில பள்ளிகளில் குறைவாகவும் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்கள் குறைவாக உள்ள  பள்ளிகளும்,  ஆசிரியர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளும் ஒன்றோடு ஒன்று பேசி, அனுமதிக்கப்பட்ட அளவில் ஆசிரியர்களை பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிநிரவல் நிறைவேற்றப்பட்டால் தான், அரசுக்கு நிதி இழப்பு குறையும் என்று கூறப்படுகிறது.
பணி நிரவல் மூலம், குறைவான ஆசிரியர்களை கொண்டு இயங்கும் பள்ளிகளின் கல்வித் தரம் அதிகரிக்கும். ஆனால், பல தனியார் பள்ளிகள் ஆசிரியர் பணி நிரவல் திட்டத்தை ஏற்றுக் கொள்ள தயங்குகின்றன. குறிப்பாக, தொடக்க கல்வியை பொறுத்த வரையில் பல பள்ளிகளில்  ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக  தொடக்க கல்வி அளவிலான ஆசிரியர் பணி நிரவல் மிகுந்த பயன் அளிக்கும் என்று தொடக்க கல்வி துறை கருதுகிறது.
ஆசிரியர் பணி நிரவல் குறித்த விஷயத்தில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் முன் உதாரணமாக திகழ்கிறது. மற்ற மாநிலங்களில் இத்திட்டத்திற்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையில், இம்மாவட்டத்தில் மட்டும் இத்திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அனைவரும் அருகருகே உள்ள இடங்களுக்கு ‘கவுன்சலிங்’ மூலம் மாற்றம் பெற்றதே இந்த திட்டம் இம்மாவட்டத்தில் வெற்றி பெற்றதற்கு முழு காரணம். அதேபோல், சமீபத்தில் செங்கல்பட்டில் நடந்த ஒரு கூட்டத்திலும், அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆசிரியர் பணி நிரவல், பள்ளி அங்கீகாரம் புதுப்பித்தல் உள்ளிட்ட விஷயங்கள் அலசி, ஆராயப்பட்டன. முடிவாக, அரசு உதவி பெறும் அனைத்து தொடக்க கல்வி பள்ளிகளும் ஆசிரியர் பணி நிரவலை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us