தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கார்பரேட் நிர்வாக மையத்தை நிறுவியது திருச்சி ஐ.ஐ.எம்.

கார்பரேட் நிர்வாக மையத்தை நிறுவியது திருச்சி ஐ.ஐ.எம்.

கார்பரேட் நிர்வாக மையத்தை நிறுவியது திருச்சி ஐ.ஐ.எம்.


UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM

ADDED : ஜூன் 17, 2014 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM ADDED : ஜூன் 17, 2014 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருச்சி ஐ.ஐ.எம்., கடந்த ஜுன் 13ம் தேதி, சென்னையில், கார்பரேட் நிர்வாக மையத்தை நிறுவியுள்ளது.

கார்பரேட் நிர்வாகம் தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்துவது மற்றும் மேம்படுத்துவது ஆகியவை இந்த மையத்தின் பிரதான நோக்கம்.

கார்பரேட் நிர்வாகம் தொடர்பான வருடாந்திர மாநாடுகளை நடத்துவது, ஆராய்ச்சி திட்டங்களை ஒருங்கிணைப்பது மற்றும் முன்னெடுப்பது, ஆராய்ச்சி செமினார்கள் மற்றும் ஒர்க் ஷாப்புகளை ஏற்பாடு செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்த மையம் துணைபுரியும்.

நீண்டகால நோக்கில், கார்பரேட் நிர்வாகம் தொடர்பான திறன் வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, கார்பரேட் நிர்வாகக் கொள்கை வகுப்பில் ஆலோசனை வழங்குதல் மற்றும் தலையீடுகள் மூலமாக முக்கியப் பங்காற்றுவது போன்றவை இதன் நீண்டகால நோக்கங்கள்.

இந்த மையம் திறக்கப்பட்ட அதேநாளில், ஐ.ஐ.எம்., திருச்சி, தனது முதல் கார்பரேட் நிர்வாக மாநாட்டை ஏற்பாடு செய்தது. இதில், மகிந்திரா அன்ட் மகிந்திரா லிமிடெட் இயக்குநர் பாரத் தோஷி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us