தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல் முயற்சியிலேயே வெற்றி: கிராமப்புற இளைஞர் சாதனை

முதல் முயற்சியிலேயே வெற்றி: கிராமப்புற இளைஞர் சாதனை

முதல் முயற்சியிலேயே வெற்றி: கிராமப்புற இளைஞர் சாதனை


UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM

ADDED : ஜூன் 18, 2014 12:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM ADDED : ஜூன் 18, 2014 12:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: ஐ.ஏ.எஸ். தேர்வெழுத விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்கு ஊக்கமளித்து, உதவி செய்ய தயாராக இருக்கிறேன் என நடப்பு ஆண்டில் வெற்றி பெற்ற கவுதம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வி.பி. கவுதம் வெற்றிபெற்றுள்ளார். இந்திய அளவில் 138 வது ரேங்க் பெற்றுள்ளார். தந்தை பழனிச்சாமி வக்கீலாகவும், தாய் கஸ்தூரி ஆசிரியராகவும் உள்ளனர். ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அண்ணா பல்கலையில் பொறியியல் முடித்தார்.

சென்னையில் உள்ள சங்கர் அகாடமியில் ஐ.ஏ.எஸ். தேர்விற்காக தன்னை தயார்படுத்தி வந்தார். புவியியலை விருப்ப பாடமாக எடுத்து மெயின் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். ஐ.எப்.எஸ். தேர்வில் ஏற்கனவே தென் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

வி.பி.கவுதம் கூறியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற அசாதாரண அறிவு இருக்க வேண்டிய தேவையில்லை. பொது அறிவு இருந்தால் போதும். நாளிதழ்களை தவறாமல் படிக்க வேண்டும். குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பும் கிராமப்புறமாணவர்களுக்கு ஊக்கமளிக்கவும், உதவவும் தயாராக இருக்கிறேன் என்றார். இவரை வாழ்த்த 80156 16485.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us