தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக்கட்டணம் வெளியிடாததால் இரண்டாம் நாள் கலந்தாய்வு மந்தம்

கல்விக்கட்டணம் வெளியிடாததால் இரண்டாம் நாள் கலந்தாய்வு மந்தம்

கல்விக்கட்டணம் வெளியிடாததால் இரண்டாம் நாள் கலந்தாய்வு மந்தம்


UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM

ADDED : ஜூன் 26, 2014 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM ADDED : ஜூன் 26, 2014 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கல்விக் கட்டணம் வெளியிடப் படாததால், இரண்டாம் நாள் கவுன்சிலிங்கின் போது எம்.பி.பி.எஸ். சேர்க்கை மந்த கதியில் நடந்தது.

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் கவுன்சிலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டியதால் அந்த கல்லூரியின் எம்.பி.பி.எஸ். இடங்கள் வேகமாக நிரம்பின.

மொத்தமுள்ள 127 எம்.பி.பி.எஸ். சீட்களில் 18 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தது. நேற்றைய இரண்டாம் கவுன்சிலிங்கில் 14 இடங்கள் நிரம்பின. இட ஒதுக்கீடு பிரிவில் 4 இடங்கள் காலியாக இருந்தன. பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள 36 இடங்களில் 29 எம்.பி.பி.எஸ். இடங்கள் நேற்றுமுன்தினம் நிரம்பி, ஏழு இடங்கள் காலியாக இருந்தது. மகாத்மா காந்தி கல்லூரியில் 6 இடங்கள் நிரம்பின.

நிகர்நிலை பல்கலையில் மந்தம்

நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கல்விக் கட்டணம் வெளியிடப்படாததால், நேற்றைய கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை மந்த கதியில் நடந்தது. குறிப்பாக எஸ்.சி. பிரிவு இடங்கள் நிரம்பவில்லை. எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்காத மாணவர்கள், பல் மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுத்தனர்.

வாக்குவாதம்

எம்.பி.பி.எஸ். பல் மருத்துவம் படிப்புகளுக்கு மட்டுமே இதுவரை கவுன்சிலிங் நடந்துள்ளது. மற்ற துணை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. நர்சிங் படிப்பிற்கான சேர்க்கை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பெற்றோர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் எப்போது?

மருத்துவப் படிப்பிற்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தியததை போன்று இன்ஜினியரிங், லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கும் விரைவாக முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தி முடிக்க சென்டாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இன்ஜினியரிங் லேட்ரல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us