தொழில்நுட்ப உதவியுடன் தேர்வு முறைகேடு: சிக்கினான் மாணவன்
தொழில்நுட்ப உதவியுடன் தேர்வு முறைகேடு: சிக்கினான் மாணவன்
UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM
ADDED : ஜூன் 28, 2014 11:02 AM
அ நிறம் | அளவு
சூரி: தேர்வு அறைக்குள் புளுடூத்தை பயன்படுத்திய கல்லூரி மாணவன் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டான்.
மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தை சேர்ந்த சூரியில் உள்ள கல்லூரி ஒன்றில் தத்துவவியல் தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவர் ஒருவர் தனக்கு தானே பேசி்க் கொள்வது போன்ற தோற்றத்தை கண்ட கல்லூரி முதல்வர் மாணவனிடம் சோதனை நடத்தினார்.
அதில் மாணவனின் தலையில் மொபைல் போனுடன் இணைக்கப்பட்ட புளுடூத் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவன் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டான்.
