தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதரவற்ற மகளிருக்கு பொதுக்கல்வி பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

ஆதரவற்ற மகளிருக்கு பொதுக்கல்வி பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

ஆதரவற்ற மகளிருக்கு பொதுக்கல்வி பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM

ADDED : ஜூன் 28, 2014 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM ADDED : ஜூன் 28, 2014 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில், ஆதரவற்ற மகளிர் மற்றும் வறுமை கோட்டுக்குகீழ் வாழும் மகளிருக்கு, பொதுக்கல்வி மற்றும் பல்வேறு பயிற்சி வழங்கப்படும் என கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும், தஞ்சை அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் 14 முதல் 45 வயது வரையுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற மகளிர் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மகளிருக்கு பொதுக்கல்வி மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய் உள்ள மகளிருக்கு 6 முதல் 12ம் வகுப்பு வரையும், தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி, கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் சேரும் மாணவிகளுக்கு உணவு, உடை, உறைவிடம், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், தேர்வு கட்டணம் அனைத்தும் அரசால் இலவசமாக வழங்கப்படும்.

ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி, ஏழாம் மற்றும், எட்டாம் வகுப்பில் தோல்வி அல்லது இடையில் நின்றவர்கள் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்படுவர். எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஒன்பதாம் மற்றும்,10ம் வகுப்பில் இடையில் நின்றவர்கள் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்து கொள்ளப்படுவர்.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பிளஸ்1 வகுப்பில் சேர்க்கப்படுவர். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்கள் கற்று தரப்படும். படிப்பு காலங்களில் தாயுடன், ஐந்து வயது வரையிலான ஆண் குழந்தையும், ஏழு வயது வரையிலான பெண் குழந்தையும், இந்த இல்லத்திலேயே தாயுடன் சேர்ந்து இருக்க வசதி உள்ளது.

தகுதியுள்ள மகளிர் கண்காணிப்பாளர், அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி அல்லது மாவட்ட சமூக நல அலுவகலகம், 135. நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 255287, 258501 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us