ஆடை வடிவமைத்தல் இலவச பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு
ஆடை வடிவமைத்தல் இலவச பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு
UPDATED : ஜூலை 02, 2014 12:00 AM
ADDED : ஜூலை 02, 2014 12:08 PM
நாமக்கல்: "பெண்களுக்கான ஆடை வடிவமைத்தல் குறித்த இலவச வேலைவாய்ப்பு தொழில் பயிற்சிக்கு, தகுதியானவர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் மற்றும் இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கான ஆடை வடிவமைத்தல் குறித்த இலவச வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி ஜூலை இரண்டாவது வாரத்தில் துவங்கவுள்ளது.
பயிற்சியில் பஞ்சாபி சுடிதார், பட்டியாலா சுடிதார், அரபிக் சுடிதார், ராஜஸ்தானி சுடிதார், சேலை பிளவுஸ், பேக் பட்டன் பிளவுஸ், ஃபேன்ஸி பிளவுஸ், பள்ளி மாணவர்களுக்கு சீருடை, சர்ட்ஸ், டிராயர், யூனிஃபார்ம், கோட், பர்முடாஸ், பெட்டிகோட், நைட்டீஸ் உள்ளிட்ட தையல் முறைகளின் விளக்கம், பயிற்சி வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் வரும் 5ம் தேதிக்குள் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 3/151, ரவின் பிளாசா, திருச்சி மெயின் ரோடு, நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் போது பயிற்சி செலவு, பயிற்சி பொருட்கள், உணவு ஆகியவவை இலவசமாக தரப்படும். தொடர்ந்து 21 நாட்கள் பயிற்சி மற்றும் வகுப்பு நடக்கும்.
மேலும் விவரங்களுக்கு 89030-13980 அல்லது 94432-40899 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
