தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் வெளியீடு
தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் வெளியீடு
UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM
ADDED : ஜூலை 08, 2014 11:16 AM
புதுச்சேரி: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 14ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகப்பட்சமாக ஏனாம் ரீஜென்சி பொறி யியல் கல்லூரி 33 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. மணக்குள விநாயகர், ராஜிவ்காந்தி, பாரதியார், கிறிஸ்து, ஆர்.வி.எஸ்., மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, பால் மெமோரியல், கணேஷ், ஆச்சார்யா, ஆல்பா, அவ்வையார் ஆகிய கல்லூரிகள் பி.டெக். படிப்பிற்கு தலா 29 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளன.
குறைந்தபட்சமாக கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பி.டெக். படிப்பிற்கு 26 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் நிர்ணயித்துள்ளது. கல்விக் கட்டண உயர்வு விபரம் விரைவில் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
