தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகை: லட்சக்கணக்கில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு

கல்வி உதவித்தொகை: லட்சக்கணக்கில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு

கல்வி உதவித்தொகை: லட்சக்கணக்கில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு


UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM

ADDED : ஜூலை 09, 2014 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM ADDED : ஜூலை 09, 2014 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: விசைத்தறியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் 44 விசைத்தறி சேவை மையங்கள் செயல்படுகிறது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் விசைத்தறி தொழிலாளர்களுக்கான குரூப் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு விசைத்தறியாளருக்கு நிர்ணயித்துள்ள பிரிமியம் தொகை 470 ரூபாயில் விசைத்தறி தொழிலாளர்கள் 80 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். எஞ்சிய தொகையை மத்திய அரசு, எல்.ஐ.சி. நிறுவனங்கள் செலுத்துகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் ஜெகநாதபுரம் காலனியில் இயங்கி வரும் விசைத்தறி சேவை மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் விசைத்தறி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் 1,200 ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

உதவித்தொகை வழங்குவதில் புரோக்கர்களின் தலையீட்டால் பயனாளிகளிடம் இருந்து 400 ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய விசைத்தறி வாரிய உறுப்பினர் ராஜேஷ் கூறியதாவது:
ஈரோடு விசைத்தறி மையத்தில் கடந்தாண்டு 6,919 விசைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கபட்டுள்ளனர். ஈரோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதிகளில் தான் தமிழகத்திலேயே அதிகளவில் விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர்.

ஆனால் அந்த பகுதிகளில் வெறும் 1,000 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. நெசவுத்தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத வட ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5,000 பேர் பயனடைந்து வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் இடைத்தரகர்கள் மூலம் விசைத்தறி தொழிலில் இல்லாதவர்களும் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 27 லட்சத்துக்கு ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 44 சேவை மையங்களிலும் இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தால் பல கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்ததை கண்டறியலாம். இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்குமாறு பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us