புத்தகங்களை பரிசு பொருட்களாக மாற்றினால் மாற்றம் நிச்சயம்
புத்தகங்களை பரிசு பொருட்களாக மாற்றினால் மாற்றம் நிச்சயம்
UPDATED : ஜூலை 13, 2014 12:00 AM
ADDED : ஜூலை 14, 2014 10:47 AM
ஊட்டி அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் "சர்வதேச எழுத்தாளர்கள் தினம்" கொண்டாடப்பட்டது. தமிழ் உயராய்வு துறைத் தலைவர் டாக்டர் முருகேசன் தலைமை வகித்தார். மூத்த பேராசிரியர்கள் ஆத்மஜோதி, பரமேஸ் வரி, ஷோபனா, சரவணன், மணிவண்ணன், பாலமுருகன், செங்கமுத்து உட்பட பலர் பல கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் "மாணவ சமுதாயத்தினர் மத்தியில் சர்வதேச எழுத்தாளர்கள் தினம் குறித்த விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. மாணவர்கள் தங்களிடம் உள்ள எழுத்து திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். பரிசுப் பொருட்களாக புத்தகங்களை வழங்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். பிப். 14 காதலர் தினத்தன்று பல கோடி ரூபாய்க்கு ரோஜா மலர்கள் விற்கப்படுகின்றன;
ஆனால் சர்வதேச எழுத்தாளர்கள் தினத்தில் சில ஆயிரம் ரூபாய்க்கு கூட புத்தகங்கள் விற்கப்படுவதில்லை. குளிர் மண்டலமான நீலகிரி வெப்ப மண்டலமாக மாறி வருகிறது; எனவே விழாக்களில் பரிசுப் பொருட்களாக மரக்கன்றை வழங்க வேண்டும்" என்பன போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன.
"பரிசுப் பொருட்களாக புத்தகங்களை வழங்குவோம்" என்ற உறுதி மொழியை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். கல்வியில் சிறந்து விளங்கிய 15 மாணவர்கள் எழுத்தாளர்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதை, பேச்சுப் போட்டி, நூல் விமர்சனம், எழுத்தாளர்கள் அறிமுகம், பாடல், பல்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
