தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கவுன்சில் விவகாரம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மருத்துவ கவுன்சில் விவகாரம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மருத்துவ கவுன்சில் விவகாரம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்


UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM

ADDED : ஜூலை 15, 2014 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM ADDED : ஜூலை 15, 2014 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவ முறை மத்திய கவுன்சில் உறுப்பினர்கள் நியமனத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த தாக்கலான வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் முரளிதரன் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்திய மருத்துவ கவுன்சில் இந்திய மருத்துவ முறை மத்திய கவுன்சில் உறுப்பினர் நியமனங்களில் முறைகேடு நடக்கிறது. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர்.

இந்திய மருத்துவ முறை மத்திய கவுன்சிலுக்கு ஆயுர்வேத டாக்டர் வனிதா நியமிக்கப்பட்டார். இந்நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், "வனிதா நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்; அவர் தகுதியானவர், சிறப்பாக பணிபுரிவார் எனக் கருதினால் கோர்ட் தலையிடாது" என உத்தரவிட்டனர்.

கவுன்சில் உறுப்பினர்கள், சிறந்த கல்வியறிவு மற்றும் நியாயவாதிகளாக இருக்க வேண்டும். 2013 நவ. 5 மற்றும் 2014 பிப். 28ல் நியமிக்கப்பட்ட கவுன்சில் உறுப்பினர்களை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். இந்நியமனங்களை மாற்றியமைக்கும் வரை தற்போது பதவியில் உள்ள உறுப்பினர்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் கொண்ட பெஞ்ச் முன் மனு விசாரணைக்கு வந்தது. மத்திய ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், சித்தா, ஓமியோபதி துறை செயலர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை செயலர், இந்திய மருத்துவ கவுன்சில் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us