தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப படிப்புகளுக்கு என்.பி.ஏ. அங்கீகாரம் அவசியம்: அமைச்சர்

தொழில்நுட்ப படிப்புகளுக்கு என்.பி.ஏ. அங்கீகாரம் அவசியம்: அமைச்சர்

தொழில்நுட்ப படிப்புகளுக்கு என்.பி.ஏ. அங்கீகாரம் அவசியம்: அமைச்சர்


UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM

ADDED : ஜூலை 19, 2014 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM ADDED : ஜூலை 19, 2014 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: தொழில்நுட்ப படிப்புகளை கற்பிக்கும் உயர்கல்வி நிறுவனங்கள், 6 வருடங்கள் கழிந்த பின்னர் அல்லது அதன் 2 batch மாணவர்கள் படித்து வெளியேறிய பின்னர், இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ, அப்போது, கட்டாயம் NBA (National Board of Accreditation) அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென மத்திய மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, "NAAC அமைப்பு, கல்வி நிறுவனத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்குகிறது. ஆனால், NBA அமைப்பு, தொழில்நுட்ப படிப்பிற்கு அங்கீகாரம் வழங்குகிறது.

NBA அமைப்பு, ஏற்கனவே, கல்வி நிறுவனங்கள் வழங்கும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு அங்கீகாரங்களை வழங்கி வருகிறது. UGC மற்றும் AICTE விதிமுறைகளின்படி, NBA, ஒரு தர நிர்ணய அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் விரிவான நலன்களுக்காகவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us