குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தொண்டு நிறுவனங்களுக்கு பயிற்சி
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தொண்டு நிறுவனங்களுக்கு பயிற்சி
UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM
ADDED : ஜூலை 21, 2014 12:09 PM
திருவள்ளூர்: குழந்தைகளின் பாதுகாப்பில் தொண்டு நிறுவனங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல், குறித்த பயிற்சி முகாமில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக தொண்டு நிறுவனங்களுக்கு குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல், பாலியல் துன்பங்களிலிருந்தும், கடத்தலில் இருந்தும் காப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமை வகித்து பேசுகையில், "குழந்தை மீதான பாலியல் வன்புணர்ச்சி மிகக் கொடுமையானது. அதில் இருந்து மீள அந்தக் குழந்தை படாத பாடுபட வேண்டும். அக்குழந்தையின் பிற்கால வாழ்வு என்பது மிகச் சிக்கலானதாக அமையும்.
ஆகவே இந்த வகை குற்றங்களை தடுப்பதற்கான செயல்பாடுகளில் சமூகச் செயல்பாட்டாளர்கள் ஈடுபட வேண்டும். குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல், துன்புறுத்தல் மற்றும் கடத்தலை தடுக்க தொண்டு நிறுவனங்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
