தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப் பள்ளியை தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை

அரசுப் பள்ளியை தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை

அரசுப் பள்ளியை தரம் உயர்த்த மக்கள் கோரிக்கை


UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM

ADDED : ஜூலை 22, 2014 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM ADDED : ஜூலை 22, 2014 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 1974ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 277 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

இம்மாணவர்கள் புட்டிரெட்டிப்பட்டி, வெ.புதூர், தாளநத்தம், நொச்சிக்குட்டை, வேப்பிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு 96.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

135 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று கடத்தூர், தர்மபுரி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கு பிளஸ் 1ல் சேர்ந்துள்ளனர். சில ஆண்டுகளாக இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி, அதற்குண்டான வைப்பு தொகை இரண்டு லட்ச ரூபாயை அரசுக்கு இப்பகுதி மக்கள் செலுத்தியுள்ளனர். ஆனால் இப்பள்ளி தரம் உயர்த்தப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனின் சொந்த தொகுதியாக இருந்தும் தரம் உயர்த்தப்படாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்பழமையான பள்ளியை தரம் உயர்த்துவதற்கு பதில், கடந்தாண்டு அமைச்சரால் ஜாலியூர், முத்தம்பட்டி, பொம்மஹள்ளி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆனால் புட்டிரெட்டிப்பட்டி பள்ளியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அதிகளவில் படிப்பதால் இப்பள்ளியை சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தரம் உயர்த்தவும், சிபாரிசு செய்யவும் முன்வருவதில்லை. இங்கு பிளஸ் 1 இல்லாததால் நல்ல மதிப்பெண் பெற்றும், விரும்பிய பாடங்கள் கிடைக்காமல் கிராமப்புற மாணவர்கள் பாதியிலேயே நிற்பதும் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு கூலி வேலைக்கும் செல்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

பிளஸ் 1 சேர முடியாமல் வீட்டிலேயே இருக்கவும் செய்கின்றனர். போதிய கட்டிட வசதி, இட வசதி, ஹாஸ்டல் வசதி இருந்தும், இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவில்லை. எனவே இப்பகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டில் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்னளர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us