தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த இளைஞர் மன்ற விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறந்த இளைஞர் மன்ற விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறந்த இளைஞர் மன்ற விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM

ADDED : ஜூலை 23, 2014 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM ADDED : ஜூலை 23, 2014 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களிடம் இருந்து சிறந்த இளைஞர் மன்ற விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மத்திய அரசு இளைஞர், மகளிர் அமைப்புகளை ஊக்கபடுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் சிறந்த சேவை புரிந்த இளைஞர் அமைப்பை தேர்வு செய்து இளைஞர் மன்ற விருது வழங்கப்படுகிறது. சிறந்த மன்றமாக தேர்வாகும் அமைப்பற்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், நற்சான்று வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் இந்தாண்டு இளைஞர் மன்ற விருதிற்கான விண்ணப்பம் நேரு யுவகேந்திரா இளைஞர், மகளிர் மன்றங்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. கடந்தாண்டு ஏப். 1ம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரையுள்ள காலத்தில் மேற்கொண்ட பணிகள் மட்டுமே விருதிற்கு பரிசீலிக்கப்படும்.

மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பங்களை மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இயங்கும் நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் பெறலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தக்க சான்றுகளோடு வரும் 5ம் தேதிக்குள் நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் வழங்க வேண்டுமென மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us