தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல் தலைமுறை தொழில் முனைவோர் விண்ணப்பிக்க அழைப்பு

முதல் தலைமுறை தொழில் முனைவோர் விண்ணப்பிக்க அழைப்பு

முதல் தலைமுறை தொழில் முனைவோர் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 02:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 02:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க செயல்படுத்தப்பட உள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சி திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கலெக்டர் ராஜேஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சி திட்டம்" என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ. டிப்ளமோ, இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாத காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கிகள் அல்லது தமிழ் நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக 25 லட்ச ரூபாய் வரை முதலீட்டு மானியமும் மூன்று சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் 21 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், பட்டியல் இனத்தோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல், அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் சேவை தொழில்கள் துவங்கலாம்.

பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் ஐந்து சதவீதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.

தகுதியுடைய படித்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் தகுதிவாய்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இலவசமாக பெற்று வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us