தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிக கட்டணம்: கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை

அதிக கட்டணம்: கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை

அதிக கட்டணம்: கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை


UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM

ADDED : ஜூலை 26, 2014 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM ADDED : ஜூலை 26, 2014 11:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: "தனியார் பள்ளி, கல்லூரிகள், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தகவல் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது" என துவக்க கல்வி துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் மேலவையில் தெரிவித்தார்.

மேலவையில் கேள்வி நேரத்தில் எம்.எல்.சி. அஸ்வத் நாராயணா (பா.ஜ.) கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கிம்மனே ரத்னாகர் கூறியதாவது: அதிகளவில் கட்டணம் செலுத்தும் பெற்றோர், கல்வி நிர்வாகத்திடம் இருந்து எந்த ஆவணங்களையும் பெற்று கொள்ளவதில்லை. ஆகவே அரசு, குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாமல், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சாத்தியமாவதில்லை.

தனியார் பள்ளி, கல்லூரிகள், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தகவல் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரிகள் மீது அரசு, சுயமாக நடவடிக்கை மேற்கொள்ளும்.

மாவட்ட அளவில் கலெக்டர்களும் தாலுகா அளவில் டி.டி.பி.ஐ. அதிகாரிகளும், அதிக கட்டணம் வசூலிக்கும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us