வாலிபால் அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு துவக்கம்
வாலிபால் அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு துவக்கம்
UPDATED : ஆக 01, 2014 12:00 AM
ADDED : ஆக 01, 2014 12:29 PM
திருப்பூர்: இந்திய பள்ளி விளையாட்டு ஆணையம் மூலம் மாநில வாலிபால் அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, கோவை மண்டல அளவில், போட்டித்தேர்வு வாயிலாக 42 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பள்ளி விளையாட்டு ஆணையம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) மூலம் மாநில அளவில் வாலிபால் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல்கட்டமாக, மண்டல அளவிலான போட்டி தேர்வு, பொங்கலூர் பி.வி.கே.என், பள்ளியில் நடந்தது.
திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில், உடற்கல்வி இயக்குனர் ஜெயபால் மேற்பார்வையில் 8 பேர் கொண்ட நடுவர் குழு போட்டியை நடத்தியது.
தேர்வானவர்கள் விவரம்: 14 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், சுதேஷ் மற்றும் விகாஷ் பிரனவ் (பி.வி.பி., - திண்டல்), ஹர்சவர்தன் (ஜி.கே.டி., - கோவை), தினகரன் (வேலவன் - திருப்பூர்), கோகுல் (பாரதி மெட்ரிக் - பெருந்துறை), ராஜேஸ்குமார் (மைக்ரோகிட்ஸ் - கோவை), தீனதயாளன் (சபர்பன் - கோவை).
மாணவியர் பிரிவில், சம்யுக்தா (பாரதி மெட்ரிக் - பெருந்துறை), பரமேஸ்வரி (புனித அமலன்னை - வெள்ளக்கோவில்), பவித்ரா (ஜேசஸ் மெட்ரிக் - ஈரோடு), சந்தியா (கொங்கு வேளாளர் - பெருந்துறை), வானதி (சாகர் வித்யாலயா - பெருந்துறை), வினிதா (அரசுப்பள்ளி - தடாகம்), ஸ்நேகா (அரசுப்பள்ளி - தடாகம்).
17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், சபரீஸ்குமார் (என்.ஜி.என்.ஜி., - கோவை), மதன்குமார் (வித்ய விகாசினி - திருப்பூர்), வர்ஷவகிருஷ்ணன் (சபர்பன் - கோவை), ராஜ்குமார் (குமுதா மெட்ரிக் - நம்பியூர்), அஸ்வின் (பி.வி.பி., - திண்டல்), விக்னேஷ்குமார் (வேலவன் மெட்ரிக் - திருப்பூர்), தேசுராம் (ஸ்ரீநிவாசா - உடுமலை).
மாணவியர் பிரிவில், ஜனனி (கொங்கு வேளாளர் - பெருந்துறை), ஜெயஸ்ரீ மற்றும் சந்தியா (அரசுப்பள்ளி - ஈரோடு), அனிஷா (இன்பேன்ட் ஜீசஸ் - திருப்பூர்), கிருபா மற்றும் கீர்த்தனா (மைக்ரோ கிட்ஸ் - திருப்பூர்), சரண்யா (அரசுப்பள்ளி - சின்ன தடாகம்).
19 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவு, கவின் பிரசாத் (ஏ.பி.சி., - கோவை), சுகுணன், உமேஸ், துர்கா பிரியன் மற்றும் தரணிதரன் (சபர்பன் - கோவை), கார்த்திக் (குமுதா மெட்ரிக் - நம்பியூர்), ராஜ்குமார் (பிரண்ட்லைன் - திருப்பூர்).மாணவியர் பிரிவில், அனுப்பிரியா, ராதா, அக்ஷயா மற்றும் அபிநயா (அரசுப்பள்ளி - ஈரோடு), ஞானசுந்தரி (குமுதா மெட்ரிக் - நம்பியூர்), கவிப்பிரியா (ஜெய்வாபாய் - திருப்பூர்), சவுமியா (அரசுப்பள்ளி - தடாகம்). இவர்கள், மாநில அளவிலான போட்டித்தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
