தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல் பரிசுகளை பகிர்ந்து கொண்ட பல பள்ளிகள்!

முதல் பரிசுகளை பகிர்ந்து கொண்ட பல பள்ளிகள்!

முதல் பரிசுகளை பகிர்ந்து கொண்ட பல பள்ளிகள்!


UPDATED : ஆக 09, 2014 12:00 AM

ADDED : ஆக 09, 2014 05:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2014 12:00 AM ADDED : ஆக 09, 2014 05:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், முதல் பரிசுகளை பல பள்ளிகள் பகிர்ந்து கொண்டன.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் நீலகிரி மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில், "புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது" க்கான கண்காட்சி மற்றும் வினாடி- வினா போட்டி, ஊட்டி பிரிக்ஸ் பள்ளி அரங்கில் நடந்தது.

அறிவியல் கண்காட்சியில், ஊட்டி ஆர்.கே.,புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி முதலிடத்தையும், பந்தலூர் மராடி, கூடலூர் பாக்கியா நகர் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் இரண்டாம் இடத்தையும், சேரம்பாடி, தாம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் ஆர்.கே., புரம் நகராட்சிப் பள்ளி ஆகியவை 3ம் இடங்களையும் பகிர்ந்து கொண்டன.

வினாடி- வினா போட்டியில், கெரடாமட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேல் குந்தா நடுநிலைப் பள்ளி, அரவேணு உண்டு உறைவிடப் பள்ளி ஆகியவை முதல் மூன்று பரிசுகளை தட்டிச் சென்றன.

"இப்பள்ளிகளின் பட்டியல் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்; தேர்வு செய்யப்படும் பள்ளிகள், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறும் தகுதியை பெறும்" என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us