தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக வாசிப்பை ஆசிரியர்களால்தான் ஏற்படுத்த முடியும்: எழுத்தாளர்கள்

புத்தக வாசிப்பை ஆசிரியர்களால்தான் ஏற்படுத்த முடியும்: எழுத்தாளர்கள்

புத்தக வாசிப்பை ஆசிரியர்களால்தான் ஏற்படுத்த முடியும்: எழுத்தாளர்கள்


UPDATED : ஆக 25, 2014 12:00 AM

ADDED : ஆக 25, 2014 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2014 12:00 AM ADDED : ஆக 25, 2014 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: "இளைய தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பை, ஆசிரியர்களால்தான் ஏற்படுத்த முடியும்&'&', என மதுரையில் நடந்த இலக்கிய கருத்தரங்கில் எழுத்தாளர்கள் பேசினர்.

காலச்சுவடு, கடவு மற்றும் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், தமிழில் புத்தக பண்பாடு என்ற கருத்தரங்கில் எழுத்தாளர்கள் பேசினர்.

புத்தக பண்பாடும் இலக்கியமும் எனும் தலைப்பில் நடந்த நிகழ்விற்கு சுகுமாறன் தலைமை வகித்து பேசுகையில், "தமிழில் 1544ம் ஆண்டு முதல் புத்தகம் வந்தாலும், 1990ல் தான் இலக்கியத்தின் போக்கில் மாற்றம் வந்தது. வாசிப்பு பழக்கமும் அதிகரித்தது&'&' என்றார்.

சுரேஷ்குமார் இந்திரஜித் பேசுகையில், &'&'மக்களை இணைக்கும் ஆற்றல் பெற்றவை புத்தகங்களும், நூலகங்களும்தான். சமூகத்தின் பொக்கிஷமாக புத்தகங்கள் உள்ளன. நூலகங்களால் மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க முடியும்" என்றார். சக்திஜோதி பேசுகையில், &'&'பெண்கள் புத்தக வாசிப்புக்கே சிரமப்பட்ட காலங்கள் இன்று மாறியுள்ளன. பெண்களும் இன்று பல படைப்புகளை எழுதி வருகின்றனர். புத்தக வாசிப்புக்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது,&'&' என்றார்.

ஜோ டி குரூஸ் பேசுகையில், &'&'எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் உண்மையைதான் பதிவு செய்கிறார்கள். எப்போதோ உள்ள நிகழ்வுகளை பதிவு செய்யும்போது அதை மெருகூட்டி, அப்போதைய காலத்திற்கு ஏற்றவாறு படைக்கின்றனர். ஆசிரியர்களை சந்திக்கும் மாணவர்களுக்கு தங்களது இலக்கிய தேடல்களுக்கு விடைகள் கிடைக்கவில்லை.

ஒவ்வொருவரும் தங்களது பிரச்னைகளைதான் முன்வைக்கின்றனர். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது காலங்களை வீணடிக்கின்றனர். புத்தக வாசிப்புகளில் மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us