தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மற்றொரு சர்ச்சையில் சிக்கிய அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்

மற்றொரு சர்ச்சையில் சிக்கிய அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்

மற்றொரு சர்ச்சையில் சிக்கிய அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்


UPDATED : நவ 29, 2014 12:00 AM

ADDED : நவ 29, 2014 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2014 12:00 AM ADDED : நவ 29, 2014 01:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அலிகார்: நூலகத்தில் மாணவியருக்கு அனுமதி மறுத்த அலிகார் பல்கலைக்கழகம், இப்போது, மற்றொரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது.

அந்த பல்கலைக்கழகம் அமைய நிலம் கொடுத்த, ராஜா மகேந்திர பிரதாபின் பிறந்த நாள் விழாவை நடத்த வேண்டும் என, பா.ஜ., வினரும், அத்தகைய விழாவை, பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த முடியாது என துணைவேந்தரும் கூறி வருவதால், மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின் அலிகார் நகரில் உள்ளது அலிகார் பல்கலைக்கழகம்.

பரந்து விரிந்த இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள, பிரமாண்ட நூலகத்தில், மாணவர்களுக்கு மட்டும்தான் அனுமதி; மாணவியருக்கு அனுமதியில்லை; மாணவர்களுடன் மாணவியரை அனுமதித்தால் காதல், கீதல் போன்ற பிரச்னை ஏற்படும் என கூறினார் துணை வேந்தர் ஜமீருதீன் ஷா. அந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதும், முடிவை மாற்றிக் கொண்ட துணைவேந்தர், மாணவியரையும் அனுமதிக்க முன்வந்தார்.

இந்நிலையில், அந்த பல்கலைக்கு நிலம் வழங்கிய, மறைந்த ராஜா மகேந்திர பிரதாப் பிறந்த தின விழா, டிச., 1ல் வருகிறது. அந்த நாளை, பல்கலை வளாகத்தில் விமரிசையாக கொண்டாட, சங் பரிவார் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் முடிவு செய்தனர். அதற்கு, துணைவேந்தர் ஜமீருதீன் ஷா எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்ச்சிகளை, பல்கலை வளாகத்திற்கு வெளியே வைத்துக்கொள்ள வேண்டும், என்றார்.

இதையறிந்த சங் பரிவார் ஆதரவு மாணவர்கள், துணை வேந்தருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்; ராஜாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியை நடத்துவோம் என்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த துணைவேந்தர், ஜமீருதீன் ஷா, அரசியல் ரீதியான நிகழ்ச்சிகளை, பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தினால், இருபிரிவினரும் மோத வாய்ப்பு ஏற்பட்டுவிடும்; என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜா மகேந்திர பிரதாப் (1 டிசம்பர் 1886 - 29 ஏப்ரல் 1979): ஆர்யன் பேஷ்வா என போற்றப்பட்டவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கு, 2 ஏக்கர் நிலம் வழங்கியவர், சுதந்திர போராட்ட தலைவர்; ஜாட் இனத்தை சேர்ந்தவர்; பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, ஆப்கனில், இடைக்கால இந்திய நிர்வாகத்தை ஏற்படுத்தி, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.

இவரின் புரட்சி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட, ரஷ்யாவின் லெனின், இவரை ரஷ்யாவுக்கு அழைத்து பாராட்டினார். சுதந்திர போராட்டத்தின்போது, 32 ஆண்டுகளாக வெளிநாடுகளில் வசித்து, உலக நாடுகளின் தலைவர்களிடம், இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர். 1932ல், அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us