தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளின் காலிப் பணியிடங்களையும் நிரப்ப யு.ஜி.சி. உத்தரவிடுமா?

கல்லூரிகளின் காலிப் பணியிடங்களையும் நிரப்ப யு.ஜி.சி. உத்தரவிடுமா?

கல்லூரிகளின் காலிப் பணியிடங்களையும் நிரப்ப யு.ஜி.சி. உத்தரவிடுமா?


UPDATED : நவ 30, 2014 12:00 AM

ADDED : நவ 30, 2014 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2014 12:00 AM ADDED : நவ 30, 2014 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும், அடுத்த கல்வி ஆண்டிற்குள் நிரப்ப வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., சமீபத்தில் உத்தரவிட்டது. சில பல்கலைகளில், ஏற்கனவே இப்பணி துவங்கி விட்டது. சென்னை பல்கலையில், சமீபத்தில், 90 பணியிடங்கள் நிரப்பப்பட்டன; தற்போதும் நேர்காணல் நடந்து வருகிறது.

அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஈரோடு, கோவையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில், தகுதியான பேராசிரியர்கள் இல்லாததை கண்டித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பல, யு.ஜி.சி.,யின் நிதி பெறுகின்றன. எனவே, அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில், காலிப் பணியிடங்களை நிரப்ப, உத்தரவிட வேண்டும்.

கல்லூரிகளில், கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை எடுக்கும் நிலை உள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சில கல்லூரிகளுக்கு மட்டும், பணியிடங்கள் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்குகிறது. இதையும் யு.ஜி.சி., கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us