தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமப்புற இளைஞர்கள் இடம் பெயர்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

கிராமப்புற இளைஞர்கள் இடம் பெயர்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

கிராமப்புற இளைஞர்கள் இடம் பெயர்வதை தவிர்க்க அறிவுறுத்தல்


UPDATED : டிச 06, 2014 12:00 AM

ADDED : டிச 06, 2014 01:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2014 12:00 AM ADDED : டிச 06, 2014 01:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: "கிராமப்புற இளைஞர்கள், இடம் பெயர்வது தவிர்க்கப்பட வேண்டும்" என, கலெக்டர் அறிவுறுத்தினார்.

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் மற்றும் கதர் கிராம தொழில்கள் ஆணையம் மூலம், பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி எச்.ஏ.டி.பி., பயிற்சி அரங்கில் நடந்தது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை வகித்து பேசுகையில், "இன்றைய இளைய சமுதாயத்தினர் தான், நாட்டின் தலைவர்களாக உருவெடுக்க உள்ள நிலையில், அவர்களை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள், வேலை தேடி நகர்புறங்களுக்கு இடம் பெயர்வது தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, கிராமங்களில் உள்ள தொழில்களை ஊக்குவித்து, அதில் இளைஞர்களை ஈடுபடச் செய்து, கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், பங்களிப்பு தொகையாக, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 5 சதவீதம், பொதுப் பிரிவினர் 10 சதவீதம் செலுத்தினால், 15- 35 சதவீத மானியத்தில், தொழில் துவங்க, வங்கிகள் கடனுதவி செய்கின்றன. எனவே, இளைஞர்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, தொழில்களை துவங்க முன்வர வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us