கலந்தாய்வு கூட்டத்தின் மூலமே இடமாறுதல் நிரப்ப தீர்மானம்
கலந்தாய்வு கூட்டத்தின் மூலமே இடமாறுதல் நிரப்ப தீர்மானம்
UPDATED : டிச 09, 2014 12:00 AM
ADDED : டிச 09, 2014 11:58 AM
மதுரை: கலந்தாய்வு கூட்டத்தின் மூலமே இடமாறுதல் நிரப்ப வேண்டும் என, மதுரையில் நடந்த தமிழ்நாடு அரசு நர்சிங் பயிற்றுனர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன: கலந்தாய்வு கூட்டம் மூலம் இடமாறுதல் நிரப்பப்பட வேண்டும். நர்சிங் பயிற்றுனர் நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு நிலைக்கு வழங்கப்படுவதை போல ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பயிற்றுனர் நிலையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க வேண்டும்.
சீருடை அணியும் திட்டத்தை கைவிட வேண்டும். அலுவலக ஊழியர்களுக்கு இணையான அலுவலக நேரத்தை முறைப்படுத்த வேண்டும். காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல்களில் ஏற்படும் முரண்பாடுகளை களைய பணிமூப்பு பட்டியல் புதுப்பித்து வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
