பட்டயத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கல்
பட்டயத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கல்
UPDATED : டிச 24, 2014 12:00 AM
ADDED : டிச 24, 2014 11:06 AM
உடுமலை: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில், ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வு எழுதிய, தனித்தேர்வர்களுக்கு திருமூர்த்திநகர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், இன்று முதல் பட்டயச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் நடந்த, தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு முடிவுகள், கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தேர்வு மதிப்பெண் மற்றும் பட்டயச் சான்றிதழ்கள் மாணவர்கள் பயின்ற நிறுவனங்களில் வழங்கப்படுகிறது.
இதையடுத்து, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில், இத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு, உடுமலை திருமூர்த்திநகர் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், இன்று (24ம் தேதி) முதல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெறுவதற்கு, கட்டாயம் தேர்வு எழுதிய ஹால் டிக்கெட் எடுத்துவர வேண்டும். இத்தகவலை, திருமூர்த்திநகர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் தெரிவித்தார்.
