தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேவாங்கர் கலை கல்லூரியில் சர்வதேச ஆய்வு மாநாடு

தேவாங்கர் கலை கல்லூரியில் சர்வதேச ஆய்வு மாநாடு

தேவாங்கர் கலை கல்லூரியில் சர்வதேச ஆய்வு மாநாடு


UPDATED : டிச 26, 2014 12:00 AM

ADDED : டிச 26, 2014 12:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2014 12:00 AM ADDED : டிச 26, 2014 12:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில், பொருட்களை பற்றிய அண்மை கால ஆய்வுகள் என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாடு நடந்தது.

கல்லூரி செயலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். முதல்வர் ரவிக்குமார் வரவேற்றார். காரைக்குடி சிக்ரி தலைமை விஞ்ஞானி ஜெயசந்திரன் மாநாட்டின் மைய கருத்தினை வழங்கினார்.

திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து ஆராய்ச்சி கட்டுரை வெளியிட, கல்லூரி செயலர் கட்டுரையை பெற்று கொண்டார். சீனா ஜீஜாங் பல்கலை செயல் இயக்குனர் ஹீக்யு யுவான், ரஷ்யா மிஸ்ஸிஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய பல்கலை கழக மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி டிமிட்ரி ஷல்யடாவ் கட்டுரைகளை வழங்கினர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், புதுச்சேரி பல்கலை இயற்பியல் துறை தலைவர் பொற்செழியன், பெல்ஜியம் ஹசல்ட் பல்கலை முதுநிலை ஆராய்ச்சியாளர் சங்கரன், அண்ணா பல்கலை பேராசிரியர் ஆதிமூலம் கருத்துரைகளை வழங்கினர்.

68 ஆராய்ச்சி கட்டுரைகளில் 32 கட்டுரைகள் விரிவுரை விளக்கத்திற்கும், 36 கட்டுரைகள் போஸ்டர் முறை விளக்கத்திற்கும் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதி கல்லூரி ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us