தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெஷாவர் பள்ளி சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதி சுட்டுக்கொலை

பெஷாவர் பள்ளி சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதி சுட்டுக்கொலை

பெஷாவர் பள்ளி சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதி சுட்டுக்கொலை


UPDATED : டிச 27, 2014 12:00 AM

ADDED : டிச 27, 2014 11:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2014 12:00 AM ADDED : டிச 27, 2014 11:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெஷாவர்: பாக்., பள்ளியில் 148 பேரை சுட்டுக் கொல்வதற்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதியை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

கடந்த 16ம் தேதி, பெஷாவர் ராணுவ பள்ளியில், ஏழு பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில், 132 குழந்தைகள் உள்ளிட்ட 148 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தெஹ்ரீக்-ஐ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பயங்கரவாத அமைப்பின் தளபதி சதாம், நேற்று பாக்., பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இது குறித்து, கைபர் பகுதியின், பெஷாவர் அரசியல் பிரிவை சேர்ந்த ஷபாப் அலி ஷா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்ருத் பகுதியில், சதாம் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த பாக்., பாதுகாப்பு படையினர், சதாமை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில், சதாம் கொல்லப்பட்டான்.

அவனது கூட்டாளி ஒருவன் உயிரோடு பிடிபட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில், பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு சதாம் திட்டம் போட்டு கொடுத்து, ஏழு பேரை அனுப்பியது தெரியவந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

கைபர் பக்டுன்க்வா பகுதியில், கடந்த ஆண்டு 11 பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட, 19 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக, சதாம் ஏற்கனவே தேடப்பட்டு வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us