தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"கம்பெனி செயலர்கள் படிப்பிற்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள்"

"கம்பெனி செயலர்கள் படிப்பிற்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள்"

"கம்பெனி செயலர்கள் படிப்பிற்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள்"


UPDATED : ஜன 12, 2015 12:00 AM

ADDED : ஜன 12, 2015 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2015 12:00 AM ADDED : ஜன 12, 2015 11:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கம்பெனி செயலர்கள் படிப்பிற்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன என, அகில இந்திய கம்பெனிகள் செயலர்கள் கழக தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மதுரை லேடிடோக் கல்லுாரி வணிகவியல் துறை சார்பில் கம்பெனிகள் செயலர்கள் படிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ரீதரன் பேசியதாவது: கம்பெனி செயலர்கள் படிப்பில் அதிக மாணவர்களை ஈடுபடுத்த ஐ.சி.எஸ்.ஐ., பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்படிப்புக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இம்மாணவர்கள் நிறுவன துறைகளில், உயர்பதவிகளை எளிதில் அடையலாம். தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் சொந்த நிறுவனம் துவக்கி நிர்வகித்து உயர்நிலையை அடையலாம், என்றார்.

இந்திய கம்பெனிகள் செயலர்கள் கழக தலைமை நிர்வாகி சுதனாசின்ஹா, மதுரை கிளை தலைவர் பரமசிவம், வணிகவியல் துறை தலைவர் மார்க்ரெட், இளநிலைத் துறைத்தலைவர் ரோஸிகாட்வின் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us