தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்வேறு சிக்கலில் தவிக்கும் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகம்

பல்வேறு சிக்கலில் தவிக்கும் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகம்

பல்வேறு சிக்கலில் தவிக்கும் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகம்


UPDATED : ஜன 25, 2015 12:00 AM

ADDED : ஜன 25, 2015 01:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2015 12:00 AM ADDED : ஜன 25, 2015 01:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்படாதது, துறைகளை மாற்றி இணைத்தது போன்ற பிரச்னைகளால், தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகம், இடியாப்ப சிக்கலில் தவித்து வருகிறது.
முதல் முறையாக:

கடந்த முறை, அ.தி.மு.க., ஆட்சியில், 2005ல், நாட்டிலேயே முதல் முறையாக, விளையாட்டுக்கு என தனியாக, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம் துவக்கப்பட்டது. துவக்கத்தில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் இந்த பல்கலை செயல்பட்டது. பின், காஞ்சிபுரம் மாவட்டம், மேல கோட்டையூருக்கு மாற்றப்பட்டது. அங்கு, மிகப்பெரிய வளாகம் இருந்தும், பாதுகாப்பில்லாத சூழல் காணப்படுகிறது.
* நிரந்தர துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் தொலைதூரக் கல்வி அதிகாரி இல்லாமல், அனைத்து பதவிகளும், பொறுப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். 
* பொறுப்பு துணைவேந்தராக இருக்கும், கிரேஸ் ஹெலினா, துணைவேந்தரின் முழு பதவிக்காலமான, மூன்றாண்டை நெருங்கிவிட்டார். நான்கு ஆண்டுகளாக, பதிவாளர்; ஏழு ஆண்டுகளாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி; ஒன்பது ஆண்டுகளாக, தொலைதூரக் கல்வி இயக்குனர் நியமிக்கப்படவில்லை.
* நிதி சிக்கல், ஊழியர் பதவி உயர்வு, பேராசிரியர் நியமனம், மாணவர்களுக்கு புதிய வசதி களை ஏற்படுத்துதல் போன்றவை பாதிக்கப்பட்டு உள்ளது. 
* துவக்கத்தில், உடற்கல்வி, யோகா, விளையாட்டு மேலாண்மை, தொழில்நுட்பம் என, எட்டு துறைகள் இருந்தன. சமீபத்தில், ஒருசில துறைகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, ஐந்தாக குறைக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து, உடற்கல்வி வல்லுனர்கள் கூறியதாவது:
துறைகளை ஒருங்கிணைப்பதில் தவறில்லை. அதே நேரம், சிக்கல் வராமல் இருக்க வேண்டும். தனித்தனியாக இருந்த, பயோ மெக்கானிக்ஸ், உடற்பயிற்சி; உடற்கூறியல் துறைகள் இணைக்கப்பட்டன. பயிற்சி துறை மற்றும் விளையாட்டு தொழில்நுட்ப துறை; சமூகவியல், மனோதத்துவ இயல் மற்றும் விளையாட்டு மேலாண்மை துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதில், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த துறைகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் - ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டிலும், மற்ற துறைகள், பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., கட்டுப்பாட்டிலும் வருகின்றன.
வசதி இல்லை:

துறைகளை மாற்றி இணைத்து உள்ளதால், இரண்டு அமைப்புகளில் இருந்தும், நிதி மற்றும் இதர உதவிகளை பெறுவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. போதுமான தளவாட பொருட்கள், மைதானம், சாலை வசதி இல்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டுகினறனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us