"பட்டம்பெற்ற மாணவர்கள் வெளியுலக சவால்களை கண்டு அஞ்சக்கூடாது"
"பட்டம்பெற்ற மாணவர்கள் வெளியுலக சவால்களை கண்டு அஞ்சக்கூடாது"
UPDATED : பிப் 08, 2015 12:00 AM
ADDED : பிப் 08, 2015 12:23 PM
ராமநாதபுரம்: "பட்டம்பெற்ற மாணவர்கள் வெளியுலக சவால்களை கண்டு அஞ்சக் கூடாது" என ராமநாதபுரத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐநாடிக்ஸ் கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவன இயக்குனர் வித்யா பேசினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜி., கல்லூரியின் 13 ம் ஆண்டு பட்ட மளிப்பு விழா மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சாலிகு தலைமையில் நடந்தது.
மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, சென்னை ஐநாடிக்ஸ் கம்ப்யூட்டர் மென் பொருள் நிறுவன இயக்குனர் வித்யா பேசியதாவது: பட்டம் பெற்ற மாணவர்கள் வெளியுலக சூழ்நிலைக்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பட்டம் பெறுவது ஒரு துவக்கம்தான். இனிதான் நல்ல எதிர்காலம் உண்டு. பட்டம் பெற்றவர்கள் உயர் கல்வியை தொடர வேண்டும்.
மாணவர்களுக்கு தொடர் கல்வி அவசியம். நம் முன்னேற்றம் மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சி பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், நம் நாடு இளைஞர் கையில்தான் உள்ளது. மாணவர்கள் நாட்டின் நலனுக்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட வேண்டும், என்றார்.
இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 414 பேர் பட்டம் பெற்றனர். இதில், பல்கலை அளவில் ரேங்க் பெற்ற 36 பேருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
