மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலைத்திட்டம் குறித்த பயிற்சி முகாம்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலைத்திட்டம் குறித்த பயிற்சி முகாம்
UPDATED : பிப் 11, 2015 12:00 AM
ADDED : பிப் 11, 2015 10:33 AM
ஆண்டிபட்டி: மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலைத்திட்டம் குறித்த பயிற்சி முகாம் ஆண்டிபட்டி வட்டார வள மையத்தில் நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ராஜலட்சுமி தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். மனவளர்ச்சி குன்றியோர், பேச்சு குறைபாடு, மூளை முடக்குவாதம், புற உலக சிந்தனைக் குறைபாடு, கற்றலில் குறைபாடு, கை,கால் பாதிப்புள்ளோர் இவர்களுக்கு இக்குறைபாடு வரக்காரணம், தடுக்கும் முறைகள், கல்வி கற்கும் உத்திகள் மற்றும் உபகரணப்பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டார வளமைய இயன்முறை மருத்துவர் முத்துச்செல்வம், சிறப்பாசிரியர்கள் விஜயகீதா, மகேஸ்வரி, செல்வக்குமார், ஆனந்தன், பிரபாகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, உதவி திட்ட அலுவலர் கரிகால்வளவன் ஆலோசனை வழங்கினர்.
