தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மின் வாரியத்தில் காலிபணியிடங்களை உடனே நிரப்பக் கோரிக்கை

மின் வாரியத்தில் காலிபணியிடங்களை உடனே நிரப்பக் கோரிக்கை

மின் வாரியத்தில் காலிபணியிடங்களை உடனே நிரப்பக் கோரிக்கை


UPDATED : பிப் 12, 2015 12:00 AM

ADDED : பிப் 12, 2015 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 12, 2015 12:00 AM ADDED : பிப் 12, 2015 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மின் வாரியத்தில், காலி பணியிடங்களை உடனே நிரப்பக் கோரி, மின் துறை அமைச்சரை முற்றுகையிட, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்; தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்படுகிறது.

1.36 லட்சம்:

இவற்றில், நிர்வாகம், செயலகம், தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை என, ஐந்து பிரிவுகளில், உதவியாளர், பொறியாளர் என, அரசு அனுமதி அளித்துள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை, 1.36 லட்சம். இதில், தற்போது, 88 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்; 49 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் பழுது சரி செய்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை முற்றுகையிட, மின் வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்...:

இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது: மின் வாரியத்தில், அரசு அனுமதி அளித்துள்ள பணியிடம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, 2.53 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இந்த எண்ணிக்கை, ஆண்டு தோறும் உயர்கிறது; அதற்கு ஏற்ப, ஊழியர் எண்ணிக்கை அதிகரிப்பது கிடையாது.

காலி பணியிடம் ஒருபுறம் என்றால், மாதந்தோறும், 250 - 500 பேர் வரை ஓய்வு பெறுகின்றனர். இதனால், 10 பேர் செய்யக் கூடிய வேலையை, ஒருவர் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, வரும் 16ம் தேதி, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நேரில் சந்தித்து, காலி பணியிடம் நிரப்புவது குறித்து, கோரிக்கை வைக்க உள்ளோம். அதற்கு அவர், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நியாயமானது:

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’ஊழியர்கள் கோரிக்கை நியாயமானது. புதிய ஊழியர் நியமனம் குறித்த அறிவிப்பு, சட்டசபை கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்படும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us