அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
UPDATED : பிப் 12, 2015 12:00 AM
ADDED : பிப் 12, 2015 01:23 PM
உடுமலையில், தமிழ்நாடு அறிவியல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்கம் சார்பில், நடக்கும் கண்காட்சியில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்கம் மற்றும் கலிலியோ அறிவியல் கழகம் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்துகிறது. உடுமலை பார்க் ரோட்டிலுள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இக்கண்காட்சி நடக்கிறது. இதன் அடிப்படையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
போட்டி விபரம்:
போட்டிகள் 6,7,8 ஒரு பிரிவாக, 9,10 மற்றும் பிளஸ் 1,2 என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொருப்பிரிவிலும், தலா 2 படைப்புகள் வீதம் ஒரு உயர்நிலைப்பள்ளிக்கு 4 படைப்புகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு 6 படைப்புகள் வீதம் அனுமதிக்கப்படுகிறது.
பேச்சுப்போட்டி, 6, 7,8 மாணவர்களுக்கு, ’நீ விரும்பும் அறிவியல் அறிஞரும் அவரது கண்டுபிடிப்பும்’, 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு ’அன்றாட வாழ்வில் அறிவியலின் தாக்கம்’, பிளஸ் 1,2 வகுப்புகளுக்கு, ’எனது பார்வையில் அறிவியல்’, ஓவியப்போட்டியில் 6,7,8 வகுப்புகளுக்கு ’தண்ணீர் தண்ணீர்’, 9,10 வகுப்புகளுக்கு ’வியத்தகு விண்வெளி’, பிளஸ் 1, 2 ’அறிவியல் அற்புதம்’ என்ற தலைப்புகளில் போட்டி நடக்கிறது.
போட்டிகள் 25ம்தேதி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. ஓவியப்போட்டியில், பங்கேற்க உள்ள மாணவர்கள், போட்டி நாளான்று காலை 9.00 மணிக்கு படைப்புகளை தயாராக வைத்திருக்க வேண்டும். போட்டிகளுக்கான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவர வேண்டும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், வரும் 21ம்தேதிக்குள் 9942467764, 9965644666, 8973993331 என்ற எண்களை தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
