ஒதுக்கீடு செய்யப்படாத சத்துணவுக்கான உணவூட்டு மானியத் தொகை
ஒதுக்கீடு செய்யப்படாத சத்துணவுக்கான உணவூட்டு மானியத் தொகை
UPDATED : பிப் 16, 2015 12:00 AM
ADDED : பிப் 16, 2015 01:02 PM
நாள் வாரியாக...
அதில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, நாள் வாரியாக, தக்காளி சாதம், வெஜிடபுள் சாதம், எலுமிச்சை சாதம், பருப்பு சாதம், கலவை சாதம் மற்றும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு அவித்த மற்றும் மசாலா முட்டை வழங்கப்படும். பள்ளிகளில், நாள் வாரியாக, பிரைடு ரைஸ், லெமன் சாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம், தக்காளி சாதம், பெப்பர், மசாலா, பருப்பு, பொரியல் ஆகிய வழங்கப்படும்.
சத்துணவு தயாரிக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் இருந்து அரிசியும், முட்டை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய், விறகு ஆகியன, வெளி மார்க்கெட்டில் வாங்கிக் கொள்ளலாம். இதில், குழந்தைகளின் உணவூட்டு செலவு மானியத் தொகையாக, ஐந்தாம் வகுப்பு வரை, தலா ஒரு மாணவருக்கு, சாம்பார் சாதம், 1.30 காசும், கலவை சாதம், 1.70 காசும் வழங்கப்படும்.
ஆறாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை, சாம்பார் சாதத்திற்கு 1.40 காசும், கலவை சாதத்திற்கு 1.80 காசு என, கணக்கிட்டு வழங்கப்படுகிறது. கடந்த, 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே, மேற்கண்ட திட்டத்தின்படி, நிதி ஒதுக்கீடு செய்து, உணவூட்டு மானியம் வழங்கப்பட்டது.
நெருக்கடி
அதன்பின், கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய நான்கு மாதங்களுக்கும், உணவூட்டு மானிய செலவு தொகை, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படவில்லை. அங்கன்வாடி மையம், சத்துணவு அமைப்பாளர்கள், அவரவர் சொந்த செலவிலும், கடன் வாங்கியும், 5,000 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை, கடந்த நான்கு மாதத்தில் செலவு செய்துள்ளனர்.
மாநில சத்துணவு திட்டத்துறையில் இருந்து, சத்துணவுக்கான உணவூட்டு மானிய தொகை ஒதுக்கீடு செய்யாததால், சத்துணவு அமைப்பாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
