UPDATED : செப் 29, 2015 12:00 AM
ADDED : செப் 29, 2015 10:07 AM
அ நிறம் | அளவு
சென்னை
:
கொருக்கு பேட்டையில், கல்லுாரி தேசிய மாணவர் படை மாணவர்கள்
குழு, வீடு வீடாக சென்று டெங்கு கொசுக்களை
உருவாக்கும், தேவையற்ற குப்பையை அகற்றியது.
சென்னை
மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட,
கொருக்குபேட்டையில், மாநகராட்சி ஊழியர்கள், சர் பிட்டி
தியாகராஜர் கல்லுாரி தேசிய மாணவர் படை மாணவர்கள் 15 பேர் இணைந்து, டெங்கு விழிப்புணர்வு பணிகளை
மேற்கொண்டனர்.
மாணவர்கள், வீடு வீடாக சென்று, டெங்கு கொசுக்களை உருவாக்கும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். இந்த வகையில், 1,340 வீடுகளில், 270 கிலோ பழைய டயர்கள், 170 கிலோ தேவையற்ற பொருட்கள் ஆகியவற்றை அகற்றினர்.
