தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட கல்வி தகவல் படிவம்; தலைமையாசிரியர்களுக்கு விளக்கம்

மாவட்ட கல்வி தகவல் படிவம்; தலைமையாசிரியர்களுக்கு விளக்கம்

மாவட்ட கல்வி தகவல் படிவம்; தலைமையாசிரியர்களுக்கு விளக்கம்


UPDATED : அக் 07, 2015 12:00 AM

ADDED : அக் 07, 2015 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2015 12:00 AM ADDED : அக் 07, 2015 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி
: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
, மாவட்ட கல்வி தகவல் படிவம் குறித்த தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வட்டார வள மையத்தில் நடந்தது. 

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய உதவித்தொடக்க கல்வி அலுவலர் மேரி மார்க்கரேட் தலைமை வகித்தார். கூடுதல் உதவித்தொடக்க கல்வி அலுவலர் கண்ணபிரான், வடக்கு ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் (பொ) கவிதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பள்ளியில் தரமான கல்வியை வழங்கும் பொருட்டு, பள்ளிக்குத்தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் தேவை, மாணவர்கள் கல்வித்தரம், மாணவர் சேர்க்கை, இடைநின்றோர் ஆகியோர் குறித்த தகவல்களை ஒவ்வொரு தொடக்க, நடுநிலை (அனைத்து வகையான பள்ளிகளிலும்), பள்ளிகளிலிருந்தும், இவ்வாண்டு செப்., 2015-16 படிவம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி விவரங்கள், பள்ளி கட்டட வசதி, தளவாட பொருட்கள், கற்றல் உபகரணங்கள் பற்றிய விவரங்கள், ஆசிரியர்கள் விவரம், புதிய மாணவர்கள் சேர்க்கை, மாணவர்கள் வகுப்பு வாரியாக, வயது வாரியாக விவரங்கள்; அரசு வழங்கும் வழங்கும் விலையில்லா பொருட்கள் பெற்ற மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்ய வேண்டும். 

குடியிருப்பு வாரியாக கணக்கு, இடைநின்றோர், இதுவரை பள்ளியில் சேராதவர் உள்ளிட்ட விவரங்களை UDISE 2015-16 படிவத்தில் பதிவு செய்யும் பொருட்டு தகவல்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், UDISE 2015-16 குறித்த விவரங்களை ஆசிரியர் பயிற்றுனர் ஆறுமுகம் விளக்கினார். இதில், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் 92 பேர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us