அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணியிடம்; விண்ணப்பம் வரவேற்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணியிடம்; விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : அக் 20, 2015 12:00 AM
ADDED : அக் 20, 2015 10:22 AM
தர்மபுரி
:
தொழிற்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள, ஒரு பணிமனை பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என,
தொழில்பயிற்சி நிலைய முதல்வர் ஜெகநாதன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தர்மபுரி மாவட்டம், கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ஒரு பணிமனை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதில், 5,200 ரூபாய், 20,200 ரூபாய் மற்றும், 1,900 தர ஊதியம் வழங்கப்படும். முறையான பள்ளிப்படிப்பில், 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்றிதழ் அல்லது தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் உடன், குறைந்த பட்சம், ஓராண்டு, உரிய பிரிவில் நிறுவனங்களில் பணியாற்றியதற்கான அனுபவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம், 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆதிதிராவிட அருந்ததியர் (பெண்கள்), ஆதரவற்ற விதவை முன்னுரிமை பிரிவிற்கு, அதிக பட்ச வயது, 1.7.2015 அன்று, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், புகைப்படத்துடன் கூடிய கல்வித்தகுதி, வயது, ஜாதி உள்ளிட்ட உரிய சான்றிதழ்களுடன் தங்களது விண்ணப்பத்தை, வரும், 29-ம் தேதி மாலை, 5 மணிக்குள், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கடகத்தூர், செல்லியம்பட்டி (அஞ்சல்), பாப்பாரப்பட்டி (வழி) தர்மபுரி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
